வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புறங்களில் பாதுகாப்பான வீடு வழங்குதல்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 1:13PM by PIB Chennai
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்- நகர்ப்புறத்தின் கீழ் இதுவரை 118.64 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டு மாநில அரசுகளால் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதுவரை 114.33 லட்சம் வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, 85.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு தொக்கான் சாஹூ தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், மாநில/யூனியன் பிரதேச அரசுகளால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய நிதியுதவியாக ஐஎஸ்எஸ்ஆர் திட்ட வீடுகளுக்கு, ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். இதேபோன்று ஏஎச்பி மற்றும் பிஎல்சி வகை வீடுகளுக்கு தலா ரூ.1.5 லட்சம் வரையிலும் வழங்கப்படுவதுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 6.5 சதவீத வட்டி மானியத்துடன் ஒரு வீட்டிற்கு ரூ.2.67 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு தொக்கான் சாஹூ தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038342
***
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2038441)
आगंतुक पटल : 82