பாதுகாப்பு அமைச்சகம்
'திரிபுட்' அறிமுகம்
இரண்டு கூடுதல் P1135.6 கப்பல்களில் முதல் பின்தொடர்கிறது
Posted On:
24 JUL 2024 10:32AM by PIB Chennai
இந்திய கடற்படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் (ஜி.எஸ்.எல்) கட்டுமானத்தில் உள்ள இரண்டு மேம்பட்ட போர்க் கப்பல்களில் முதலாவது கப்பல், கோவாவில் நேற்று தொடங்கப்பட்டது. கடல்சார் பாரம்பரியத்திற்கு இணங்க, கோவா ஆளுநர் திரு பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில், அதர்வ வேதத்திலிருந்து பிரார்த்தனைக்கு திருமதி ரீட்டா ஸ்ரீதரனால் கப்பல் இயக்கி வைக்கப்பட்டது. இந்திய கடற்படையின் வெல்ல முடியாத உணர்வையும், தொலைதூர மற்றும் ஆழமான தாக்கும் திறனையும் பிரதிபலிக்கும் வலிமைமிக்க அம்பின் நினைவாக இந்த கப்பலுக்கு திரிபுட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு திரிபுட் நவீன போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம், கோவா ஷிப்யார்ட் நிறுவனத்திற்கு இடையே 2019 ஜனவரி 25 அன்று கையெழுத்தானது. இந்தக் கப்பல் எதிரிகளின் மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரிபுட் வகை கப்பல்கள் 124.8 மீ நீளமும் 15.2 மீ அகலமும் கொண்டவை. அவற்றின் இடப்பெயர்ச்சி தோராயமாக 3600 டன் ஆகும். வேகம் அதிகபட்சமாக 28 கடல் மைல்கள். இந்தக் கப்பல்களில் மேம்பட்ட ரகசிய அம்சங்கள், நவீன ஆயுதங்கள், சென்சார்கள், இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவாவில் கட்டப்படும் திரிபுட் வகை கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட டெக் மற்றும் தல்வார் வகை கப்பல்களை மாதிரியாக கொண்டுள்ளன. இந்தப் போர்க்கப்பல்கள் முதன்முறையாக இந்திய கப்பல் கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன.
'தற்சார்பு இந்தியா' முன்முயற்சிக்கு இணங்க, ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உட்பட பொருத்தப்பட்ட உபகரணங்களில் பெரும்பாலானவை உள்நாட்டைச் சேர்ந்தவை. இதன் மூலம் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி, இந்திய உற்பத்தி பிரிவுகளால் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. இது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், நாட்டில் திறன் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
***
(Release ID: 2036157)
PKV/RR/KR
(Release ID: 2036184)
Visitor Counter : 60