நிதி அமைச்சகம்

விண்வெளி பொருளாதாரத்தை அதிகரிக்க ரூ.1,000 கோடியில் கூட்டு மூலதன நிதியம்

Posted On: 23 JUL 2024 12:53PM by PIB Chennai

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரத்தை ஐந்து மடங்கு  அதிகரிக்க ரூ.1,000 கோடியில் கூட்டு மூலதன நிதியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் டிஜிட்டல்மயத்தை நோக்கிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி தமது பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அவர், நுகர்வோரின் நலனைக் கருதி செல்பேசி கருவிகள் அவற்றுக்கான உபகரணங்கள், சார்ஜர்கள் ஆகியவற்றுக்கான சுங்கத் தீர்வை 15 சதவீதமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

தொலைத் தகவல் தொடர்பு சாதனங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக வெளிநாட்டிலிருநது இறக்குமதி செய்யப்படும் சாதனங்களுக்கான சுங்கத் தீர்வை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035581

***

SMB/KV/KR



(Release ID: 2035824) Visitor Counter : 7