நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையின் மொத்த மூலதன உருவாக்கம் 2022-23 ஆம் ஆண்டில் 19.04% என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது

Posted On: 22 JUL 2024 3:01PM by PIB Chennai

2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை  நாடாளுமன்றத்தில் மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வேளாண் துறையின் மொத்த மூலதன உருவாக்கமும், வேளாண் சார்ந்த துறைகளில்  மூலதன உருவாக்கத்தின் பங்கும் சீராக வளர்ச்சியடைந்து வருகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. விவசாயத் துறையின் மூலதன  பங்கு உருவாக்கம் 2022-23-ம் ஆண்டில் 19.04%  என்ற  விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.  இது  2021-22-ம் ஆண்டில் 17.7  சதவீதமாக இருந்தது.

இந்த வளர்ச்சி  வேளாண் துறையில்  முதலீட்டு உயர்வை எடுத்துக் காட்டுகிறது. 2016-17-ம் ஆண்டு முதல் 2022-23-ம் ஆண்டு வரை வேளாண் மொத்த மூலதன உருவாக்கத்தை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.70  சதவீதமாக இருந்தது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில், வேளாண் முதலீட்டை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

2024 ஜனவரி 31 நிலவரப்படி 7.5 கோடி கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 2018-19-ம் ஆண்டு முதல் மீன்வளம், கால்நடை வளர்ப்புக்கும் கிசான் கடன் அட்டை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (AIF) அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, சமூக விவசாயத் திட்டங்களுக்கு நடுத்தர கால கடன் நிதியுதவியை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034945

 

----

(Release ID: 2034945)


(Release ID: 2035625) Visitor Counter : 60