நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உலக அளவில் சரக்கு ஏற்றுமதியில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது

Posted On: 22 JUL 2024 3:07PM by PIB Chennai

உலக அளவில் சரக்கு ஏற்றுமதியில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 2023-ம் நிதியாண்டில், 121.6 பில்லியன் டாலரில் இருந்து 2024-ம் நிதியாண்டில்  78.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
தொ
லைத்தொடர்பு, கணினி மற்றும் தகவல் சேவை ஏற்றுமதியில், இந்தியா உலகில் 2 வது இடத்தில் உள்ளது.
மொத்த வர்த்தகத்தில் உலகளாவிய மதிப்புச் சங்கிலி தொடர்பான வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு 2019- ல் 35.1 சதவீதத்திலிருந்து 2022 -ல் 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.


வர்த்தக இறக்குமதி மற்றும் அதிகரித்து வரும் சேவைகள் ஏற்றுமதி காரணமாக, இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேம்பட்டுள்ளது

2023-ல் பணம் அனுப்புதல் 120 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லை எட்டியது

இந்தியாவுக்கு பணம் அனுப்புவது 2024 ஆம் ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்து 124 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முந்தைய ஆண்டில் 58.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எதிராக 2024 ஆம் நிதியாண்டில் நிகர மூலதனம் 86.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது


வளர்ந்து வரும் சந்தையில், இந்திய ரூபாய், அதன் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட நாணயமாக திகழ்கிறது.


2024 மார்ச்  நிலவரப்படி, இந்திய குடியிருப்பாளர்களின் வெளிநாட்டு நிதி சொத்துக்கள் 1,028.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 109.7 பில்லியன் அமெரிக்க டாலர் (11.9 சதவீதம்) அதிகமாகும்

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வெளிநாட்டுக் கடன் விகிதம் 2023 மார்ச் மாத இறுதியில் 19.0 சதவீதத்திலிருந்து 2024 மார்ச் இறுதியில் 18.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

 

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034949

 

***

SMB/PKV/DL



(Release ID: 2035388) Visitor Counter : 70