நிதி அமைச்சகம்

சமூக நலத்திட்டங்களுக்கான செலவு ரூ.23.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு

Posted On: 22 JUL 2024 2:51PM by PIB Chennai

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு ரீதியான முன்னேற்றம் காரணமாக அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக, 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 முதல் 2024 வரையிலான நிதியாண்டில், சமூக நலத்திட்டங்களுக்கான செலவு, ஆண்டின்  மொத்த வளர்ச்சி வீதத்தில் 12.8% அளவிற்கு அதிகரித்துள்ளது.  சுகாதாரத்திட்டங்களுக்கான செலவு 15.8% அதிகரித்துள்ளது. சமூகப் பணிகளுக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% அதிகரித்துள்ளது.  சுகாதாரத் துறைக்கான செலவு 2017-18-ல் 2.43 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல்  5.85 லட்சம் கோடியாகவும், சமூகப் பணிகளுக்கான செலவு 23.5 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034937

 *** 

SMB/MM/KPG/KR



(Release ID: 2035062) Visitor Counter : 27