மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

செல்வி. பூஜா மனோரமா திலிப் கெட்கருக்கு எதிராக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடவடிக்கை

Posted On: 19 JUL 2024 2:08PM by PIB Chennai

2022-ம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில், தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி. பூஜா மனோரமா திலிப் கெட்கரின் தவறான செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் மூலம், இவர் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட அவகாசங்களை மீறி, தமது பெயர், தந்தை மற்றும் தாயாரின் பெயர், புகைப்படம்/ கையெழுத்து, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் மற்றும் முகவரி போன்றவற்றின் உண்மையான அடையாளங்களை மறைத்து முறைகேடாக தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.

2. எனவே, அவருக்கு எதிராக யுபிஎஸ்சி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவழக்கு தொடர நடவடிக்கை எடுத்திருப்பதுடன், குடிமைப் பணித் தேர்வில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிப்பது / வருங்காலத்தில் நடைபெறவுள்ள தேர்வுகளில் பங்கேற்க தடைவிதிப்பது குறித்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குடிமைப் பணி தேர்வு விதிகள் 2022-ன் படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

3. தமக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றும் விதமாக யுபிஎஸ்சி, அரசியல் சாசன பொறுப்புகளை கடுமையாக பின்பற்றுவதுடன் அனைத்து தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துவகையான நடைமுறைகளையும், மிகுந்த கவனம் மற்றும் கண்ணியத்துடனும், எவ்வித சமரசத்திற்கு இடமின்றியும் நிறைவேற்றி வருகிறது. மேலும் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளின் புனிதம் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்து மிகுந்த நேர்மையுடன், விதிமுறைகளை  கடுமையாக பின்பற்றி வருகிறது.

4. யுபிஎஸ்சி, பொது மக்கள் குறிப்பாக விண்ணப்பதாரர்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கு உரியதாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற மிகுந்த நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை தொடர்ந்து நீடிக்கவும், சமரசமின்றி செயல்படுவதை சிறிதும் ஐயமின்றி உறுதிசெய்யவும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உறுதிபூண்டுள்ளது.

***

(Release ID: 2034305)

MM/AG/KR


(Release ID: 2034321) Visitor Counter : 125