உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் இன்று நடைபெற்ற போதைப் பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா, தேசிய போதைப் பொருள் ஒழிப்பு சேவையான ‘மனாஸ்’-ஐ தொடங்கிவைத்தார்

Posted On: 18 JUL 2024 8:22PM by PIB Chennai

போதைப் பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் (NCORD) 7-வது உயர்மட்டக் கூட்டம், புதுதில்லி விஞ்ஞான் பவனில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு சேவையான மனாஸ்’- உள்துறை அமைச்சர்  தொடங்கிவைத்தார்.

மேலும் போதைப் பொருள் ஒழிப்பு மையத்தின் ஸ்ரீநகர் மண்டல அலுவலகத்தையும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்த திரு அமித் ஷா, போதைப் பொருள் ஒழிப்பு அமைப்பின் 2023 ஆண்டறிக்கை மற்றும் ‘நாசமுக்த் பாரத்’  தொகுப்பையும் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், போதைப் பொருள் ஒழிப்புப் பணிகள்  மிகுந்த  முக்கியத்துவத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  கூறினார். இந்தப் பணியை மத்திய அரசு ஒரு இயக்கமாக வெற்றிகரமாக எடுத்து செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தற்போது நாம் இருப்பதால் தற்போதுதான் உண்மையான போராட்டம் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

35 வயதுக்கு கீழே உள்ள நாட்டு மக்கள் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதியை ஏற்பதுடன், 35 வயதுக்கு மேற்பட்டோர் அவர்களுக்கு வழிகாட்டினால் மட்டுமே இந்தப் போரில் நம்மால் வெற்றி பெற முடியும் என்றார். அரசால் மட்டும் இதில் வெற்றி பெற முடியாது எனறு கூறிய அமித் ஷா, இப்பிரச்சனையை நாட்டில் உள்ள 30 கோடி மக்களின் போராட்டம் என்ற அணுகுமுறையின் மூலமே சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034137

***

MM/AG/RR


(Release ID: 2034280) Visitor Counter : 61