நித்தி ஆயோக்

மின்னணுவியல் துறையில் உலக அளவில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துதல் குறித்த அறிக்கையை நித்தி ஆயோக் நாளை வெளியிடுகிறது

Posted On: 17 JUL 2024 2:59PM by PIB Chennai

"மின்னணுவியல்: உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் நித்தி ஆயோக் தனது அறிக்கையை நாளை (18 ஜூலை 2024)  வெளியிடுகிறது. இந்த அறிக்கை இந்தியாவின் மின்னணுத் துறையின் இலக்குகள், சவால்கள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவான பகுப்பாய்வைக் கொண்டிருக்கும். மின்னணு உற்பத்தியில் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் வழிகளை இந்த அறிக்கை வழங்கும்.

2023-ம் நிதியாண்டில், இந்தியாவின் மின்னணுத் துறை ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. இந்தியாவின் மொத்த வணிக ஏற்றுமதியில் 5.32% என்ற கணிசமான பங்களிப்பை இத்துறை வழங்கியது. இந்தத் துறையின் ஏற்றுமதி செயல்திறன் உலகளாவிய சந்தையில் அதன் போட்டித்தன்மையையும் சர்வதேச தேவையைப் பயன்படுத்துவதற்கான அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது. இது உலகளாவிய மின்னணு சூழலில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மின்னணு உற்பத்தித் துறையும் முக்கியப் பங்கு வகிக்கும்இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் இதை அடைய முடியும். இந்த கண்ணோட்டத்துடன், மின்னணுவியல் துறையில் உற்பத்தி மையமாக மாறுவதற்கான வழிகாட்டுதலை பரிந்துரைக்கும் ஒரு விரிவான அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிடவுள்ளது.

***

PLM/KV

 



(Release ID: 2033838) Visitor Counter : 24