சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்
प्रविष्टि तिथि:
16 JUL 2024 2:15PM by PIB Chennai
இந்திய அரசியல் சாசனப் பிரிவு 124 உட்பிரிவு (2)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 1) ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு என் கோடீஸ்வர் சிங், 2) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆர் மகாதேவன், ஆகிய இருவரையும் மேற்குறிப்பிட்ட மூதுரிமைப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
(Release ID: 2033618)
MM/KPG/KR
(रिलीज़ आईडी: 2033629)
आगंतुक पटल : 135