பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு: பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கான 346 உள்நாட்டுப் பொருட்களின் 5-வது ஆக்கப்பூர்வ பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
16 JUL 2024 12:29PM by PIB Chennai
பாதுகாப்புத்துறையில் தற்சார்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் விதமாகவும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இறக்குமதியைக் குறைக்கவும், பாதுகாப்பு அமைச்ககத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு உற்பத்தித்துறை, 346 உள்நாட்டுப் பொருட்கள் அடங்கிய 5-வது ஆக்கப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகள் / நடைமுறைகள் / உபநடைமுறைகளை மாற்றியமைத்தல் / உதிரி பாகங்கள் / கச்சாப் பொருட்கள் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் அடங்கும். 1,048 கோடி ரூபாய் மதிப்புள்ள இறக்குமதிப் பொருட்களுக்கு மாற்றாக இந்த உள்நாட்டுப் பொருட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை, இந்திய தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களின் பட்டியல் https://srijandefence.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், இந்திய ஆப்டெல் நிறுவனம், மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம், கோவா கப்பல் கட்டும் நிறுவனம், இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுதல் & பொறியியல் நிறுவனம் உள்ளிட்டவை பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் 5-வது ஆக்கப்பூர்வ பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033571
***
MM/KPG/KR
(Release ID: 2033588)
Visitor Counter : 89