நிதி அமைச்சகம்
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த இந்தியாவின் ஜி20 பணிக்குழு அறிக்கை வெளியிடப்பட்டது - 50 ஆண்டுகளில் அடையும் வளர்ச்சியை இந்தியா 9 ஆண்டுகளில் அடைந்துள்ளது: இந்தியாவின் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் கந்த்
प्रविष्टि तिथि:
15 JUL 2024 5:12PM by PIB Chennai
பொருளாதார மாற்றம், நிதி உள்ளடக்கம், வளர்ச்சி ஆகியவற்றுக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த இந்தியாவின் ஜி20 பணிக்குழுவின் இறுதி அறிக்கை' புதுதில்லியில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் ஜி 20 ஷெர்பா திரு அமிதாப் கந்த், இன்போசிஸ் இணை நிறுவனர் திரு நந்தன் நிலேகனி ஆகியோர் இந்த பணிக்குழுவுக்குத் தலைமை வகித்து அறிக்கையைத் தயாரித்தனர்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வரையறைகளையும் கட்டமைப்பையும், இந்தப் பணிக்குழுவின் பணிகள் காரணமாக மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டன.
இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய திரு அமிதாப் கந்த், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா பெரிய சாதனைகளைச் செய்துள்ளது என்றார். 50 ஆண்டுகளில் எட்ட வேண்டிய வளர்ச்சியை இந்தியா 9 ஆண்டுகளில் எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில், சாலையோர வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 46 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல்மயமாக்கலில் இந்தியா பெரிய அளவில் முன்னேறியுள்ளது என்றும் இந்த அறிக்கை இத்துறையில் உலகிற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் திரு அமிதாப் கந்த் தெரிவித்தார்.
இதன் முழுமையான அறிக்கையை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://dea.gov.in/sites/default/files/Report%20of%20Indias%20G20%20Task%20Force%20On%20Digital%20Public%20Infrastructure.pdf
Release ID: 2033389
PLM/KR
***
(रिलीज़ आईडी: 2033558)
आगंतुक पटल : 129