குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் 2024 ஜூலை 11-12 தேதிகளில் மும்பை பயணம்
Posted On:
10 JUL 2024 11:38AM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 ஜூலை 11-12 தேதிகளில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
திரு தன்கர் ஜூலை 11 அன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றுவார்.
தமது பயணத்தின் இரண்டாவது நாளில், மும்பையில் உள்ள நர்சி மோன்ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றுகிறார்.
தமது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது, திரு. தன்கர் மகாராஷ்டிராவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் செல்கிறார்.
***
(Release ID:2031990)
PKV/RR/KR
(Release ID: 2032002)
Visitor Counter : 106