பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 JUN 2024 3:07PM by PIB Chennai

வணக்கம்,

இன்றைய நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்கள் வெளியிடப்படுகின்றன. இதில் பங்கேற்றுள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள்  மற்றும் அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே,

திரு எம். வெங்கையா நாயுடு நாளை ஜூலை 1-ஆம் தேதியன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 75 ஆண்டுகள் அசாதாரணமானவை. திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசியத் தலைவராக திரு வெங்கையா நாயுடு இருந்த காலத்தில் இந்த நட்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவர் வகித்த பொறுப்புகள், நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக அவரது பதவிக்காலம், மாநிலங்களவைத் தலைவராக அவர் பதவி வகித்தது போன்றவையும் சிறப்பான காலங்கள். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

நண்பர்களே,

திரு வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் சிறந்த கலவை. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பிஜேபி-யின் தற்போதைய நிலைக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் திரு வெங்கையா நாயுடு. அவர் "தேசமே முதன்மையானது" என்ற சித்தாந்தத்துடன் ஏபிவிபி அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.  திரு வெங்கையா நாயுடு அவசரநிலைக் காலத்தில் சுமார் 17 மாதங்கள் சிறையில் இருந்தார்.

நண்பர்களே,

அதிகாரம் என்பது வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவது இல்லை. அது சேவையின் மூலம் திட்டங்களை நிறைவேற்றும் சாதனமாக இருக்கிறது. அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றபோது திரு வெங்கையா நாயுடு தன்னை நிரூபித்தார். அவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். வெங்கையா நாயுடு கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்பினார். எனது அமைச்சரவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு வெங்கையா நாயுடு பணியாற்றினார்.

நண்பர்களே,

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரின் மென்மையான குணம், சொற்பொழிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. வெங்கையா நாயுடுவின் அறிவுத்திறன், இயல்பான தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. திரு வெங்கையா நாயுடுவின் வார்த்தைகளில் ஆழம், தீவிரம், தொலைநோக்கு, துடிப்பு, துள்ளல் மற்றும் விவேகம் உள்ளது.

திரு வெங்கையா நாயுடு மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது உருவாக்கிய நேர்மறையான சூழல் பாராட்டத்தக்கது. மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநிலங்களவையில் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அவையின் கண்ணியத்தை பராமரித்து இதுபோன்ற உணர்வுப்பூர்வமான மசோதாக்களை நிறைவேற்றியதில் திரு வெங்கையா நாயுடுவின் அனுபவம் மிக்க செயல் திறன் பாராட்டத்தக்கது. திரு வெங்கையா நாயுடு நீண்ட ஆயுளுக்கு, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

திரு வெங்கையா நாயுடு, வாழ்க்கைப் பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு திரு நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும். வெங்கையா நாயுடுவும் நூற்றாண்டு மைல்கல்லைக் கொண்டாடுவார். இந்தத் தருணத்தில் திரு வெங்கையா நாயுடுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****

(Release ID: 2029684)

 




(Release ID: 2031749) Visitor Counter : 46