பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேசிய பிரதமர், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்


இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதில் தங்களது நிலைப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்

பரஸ்பரம் நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்

இந்தியாவுக்கு வருகை தருமாறு இங்கிலாந்துப் பிரதமர் ஸ்டார்மருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்


Posted On: 06 JUL 2024 3:06PM by PIB Chennai

இங்கிலாந்து பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-07-2024) உரையாடினார்.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்கும், தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதிலும், அதை முன்னெடுத்துச் செல்வதிலும் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். பரஸ்பரம் பயனளிக்கும் இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கு இரு தரப்பும் பணியாற்றுவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இங்கிலாந்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியில் இந்திய சமுதாயத்தின் நேர்மறையான பங்களிப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்தவும் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியாவுக்கு விரைவில் வருகை தருமாறு இங்கிலாந்துப் பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

***

PLM/KV

 


(Release ID: 2031222) Visitor Counter : 102