சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பாராட்டி, கௌரவித்தார்
Posted On:
03 JUL 2024 3:48PM by PIB Chennai
இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதற்காக இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று (03.07.2024) பாராட்டி, கௌரவித்தார்.
இங்கிலாந்தில் 2024 ஜூன் 18 முதல் ஜூன் 27 வரை நடைபெற்ற டி20 போட்டிகளில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணி தொடரை வென்றது.
இதையொட்டி புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியின் இந்த வெற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அணியினரின் மனஉறுதி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்த வெற்றி முழு நாட்டிற்கும் சொந்தமானது என்று அமைச்சர் திரு வீரேந்திர குமார் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய காது கேளாதோர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
***
PLM/AG/KV
(Release ID: 2030434)
Visitor Counter : 60