நிலக்கரி அமைச்சகம்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூன் 24-ல் நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
02 JUL 2024 4:05PM by PIB Chennai
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி, ஜூன் 2024-ல் 84.63 மெட்ரிக் டன்னை (தற்காலிகமானது) எட்டியிருப்பதன் மூலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 14.49 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 73.92 மெட்ரிக் டன் நிலக்கரி எடுக்கப்பட்டது. ஜூன் 2024-ல் கோல் இந்தியா நிறுவனம், 63.10 மெட்ரிக் டன் (தற்காலிகமானது) எட்டி 8.87 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கேற்ப, நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்ட அயராத மற்றும் நீடித்த முயற்சிகளின் வாயிலாக, நீடித்த வளர்ச்சி மற்றும் தற்சார்பை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030228
***
MM/RS/RR
(रिलीज़ आईडी: 2030243)
आगंतुक पटल : 106