பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

9 ஆண்டு டிஜிட்டல் இந்தியா செயல்பாட்டுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2024 1:49PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து அதிகாரம் பெற்ற இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைகவ் இந்தியாவின் எக்ஸ் தள வெளியீட்டைப் பகிர்ந்து  பிரதமர் எழுதியிருப்பதாவது:

“டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது. வாழ்க்கையை எளிதாக்குவதையும், வெளிப்படைத் தன்மையையும் ஊக்குவித்துள்ளது. பத்து  ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில்  பயன்படுத்தியிருக்கும் முயற்சிகளின் காட்சிகளை இந்தப் பதிவு வழங்குகிறது.”

***

(Release ID: 2029962)

SMB/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2029978) வருகையாளர் எண்ணிக்கை : 132