இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்திற்கு நேரில் சென்று ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும் வீரர்களை ஊக்குவித்தார்

Posted On: 29 JUN 2024 5:59PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (29.06.2024) பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்திற்குச் சென்றார்.  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை அவர் சந்தித்ததுடன் கட்டமைப்பு வசதிகள்  குறித்தும் ஆய்வு செய்தார்.

அங்குள்ள தேசிய சிறப்பு மையத்தில் மற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் சில முக்கிய பயிற்சியாளர்களுடனும் அமைச்சர் உரையாடினார். வீரர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அரசு தொடர்ந்து வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் பஞ்ச்குலா சென்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், அங்கு நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்பட்ட  போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியத் தடகளக் கூட்டமைப்பிற்கான புதிய இலச்சினையையும் அவர் வெளியிட்டார். 

****  

SMB/PLM/KV



(Release ID: 2029554) Visitor Counter : 23