பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2024 12:02PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
திரு பி வி நரசிம்மராவ், அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவ் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம்”.
***
(Release ID: 2029251)
PKV/MM/RS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2029268)
வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam