பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாதபிரபு திரு கெம்பே கவுடாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 27 JUN 2024 3:24PM by PIB Chennai

நாதபிரபு திரு கெம்பே கவுடாவின் பிறந்தநாளையொட்டி,  அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.  நாதபிரபு திரு கெம்பே கவுடா, பொருளாதார நலன், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் என திரு மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நாதபிரபு திரு கெம்பே கவுடா, பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் நிர்வாகத் திறன்கள் மூலம், அவர் தொலைநோக்கு சிந்தனை உடையவர் என அறியப்படுவார். பொருளாதார நலன், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் உருவாக்கிய பெங்களூரு, அதன்  சுறுசுறுப்பு, வலிமை மற்றும் புதுமைகளுக்காக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது.

சமுதாயத்திற்கான அவரது தொலைநோக்கு சிந்தனைகளை நிறைவேற்ற நமது அரசு தொடர்ந்து பணியாற்றுவதுடன், அவரது நற்பண்புகளையும் நிலைநாட்டுவோம். ‘வளமைக்கான சிலை’-யிலிருந்து சில படங்களை பகிர்ந்துள்ளேன்,  2022-ல் இந்தச் சிலையைத் திறந்து வைக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது”.

***

PKV/MM/RS/KV


(Release ID: 2029078) Visitor Counter : 74