பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினம் 2024-ஐ முன்னிட்டு தால் ஏரியில் யோகா பயிற்சி மேற்கொண்டவர்களிடையே பிரதமர் உரை

"யோகா மீது ஜம்மு-காஷ்மீர் மக்கள் காட்டிய உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பின் இன்றைய காட்சி அழியாதது"

"யோகா இயற்கையாகவே வாழ்க்கையின் ஒரு உள்ளுணர்வாக மாற வேண்டும்"

"தியானம் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த கருவி"

"யோகா சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனிதருக்கும் பொருந்தக்கூடியது மற்றும் சக்திவாய்ந்தது"

Posted On: 21 JUN 2024 10:10AM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தால் ஏரியில், ஸ்ரீநகர் மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், யோகா மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் காட்டிய உற்சாகம் மற்றும் உறுதிப்பாடு மக்களின் மனங்களில் என்றும் அழியாமல் இருக்கும் என்று கூறினார். சர்வதேச யோகா தின நிகழ்ச்சி தாமதமாகி 2-3 பகுதிகளாக பிரிக்க வேண்டியிருந்த போதிலும், வெப்பநிலை வீழ்ச்சிக்கு வழிவகுத்த மழையும், வானிலையும் மக்களின் உற்சாகத்தைக் குறைக்கத் தவறிவிட்டது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தக்கும் சமுதாயத்திற்கும் வாழ்க்கையின் இயல்பூக்கமாக மாறுவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, யோகா அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து, எளிமையான வடிவத்தை எடுக்கும்போது அதன் பலன்களை நம்மால் அறுவடை செய்ய முடியும் என்று கூறினார்.

யோகாவின் ஒரு பகுதியான தியானம், அதன் ஆன்மீகப் பார்வை காரணமாக சாதாரண மக்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். என்று கூறிய பிரதமர், இருப்பினும், அதை ஒருநிலைப்படுத்துதல் மற்றும் விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். இந்தச் செறிவு மற்றும் கவனத்தைப் பயிற்சி மற்றும் நுட்பங்கள் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இந்த மனநிலை சோர்வை குறைத்து சிறந்த முடிவுகளை எடுக்க வழிவகை செய்கிறது மற்றும் கவனச்சிதறல்களைத் தவிர்க்க உதவுகிறது. இறுதியில் வரவிருக்கும் ஆன்மீகப் பயணத்தைத் தவிர, தியானம் என்பது சுய முன்னேற்றம் மற்றும் பயிற்சிக்கான ஒரு கருவி என்று அவர் கூறினார்.

"யோகா சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு தனிமனிதருக்கும் பொருந்தக்கூடியது, சக்தி வாய்ந்தது" என்று பிரதமர் வலியுறுத்தினார். யோகா மூலம் சமூகம் பயனடையும் போது ஒட்டுமொத்த மனிதகுலமும் பயனடைகிறது என்று அவர் கூறினார். நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களில் யோகா குறித்து புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ தயாரிப்பது தொடர்பாக எகிப்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போட்டியைப் பற்றிய காணொலியைப் பார்த்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அதில் பங்கேற்றவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். அதேபோல், ஜம்மு காஷ்மீரில் யோகா மற்றும் சுற்றுலா முக்கிய வேலைவாய்ப்புகளாக மாற முடியும்" என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடுமையான வானிலையைத் தாங்கிக்கொண்டு, ஸ்ரீநகரில் நடைபெறும் சர்வதேச யோகா தினம், 2024 நிகழ்ச்சிக்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தங்கள் ஆதரவைக் காட்ட முன்வந்துள்ளனர் என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2027277)

SRI/PKV/AG/RR



(Release ID: 2027312) Visitor Counter : 31