தேர்தல் ஆணையம்
2024 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சரிபார்க்கக்கோரி 11 மனுக்கள் வரப்பெற்றுள்ளது
Posted On:
20 JUN 2024 2:28PM by PIB Chennai
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சர்பார்க்கக் கோரி, 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக 8 மனுக்களும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பாக 3 மனுக்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:
வ.
எண்
|
மாநிலத்தின் பெயர்
|
2-இடம் அல்லது 3-ம் இடம் பெற்ற வேட்பாளரிடமிருந்து வரப்பெற்ற வேண்டுகோள்(கட்சி சார்புடையவராக இருந்தால் அதன் விவரம்)
|
மக்களவை தொகுதியின் பெயர்
|
சட்டப் பேரவை தொகுதியின் பெயர்
|
சரிபார்க்கப் பட வேண்டிய வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை
|
1
|
தமிழ்நாடு
|
பிஜேபி
|
வேலூர்
|
வேலூர்
அணைக்கட்டு
கே வி குப்பம்
குடியாத்தம்
வாணியம்பாடி
ஆம்பூர்
|
1
1
1
1
1
1
|
|
|
தேமுதிக
|
விருதுநகர்
|
விருதுநகர்
|
14
|
|
|
|
மொத்தம்
|
|
20
|
சரிபார்க்கப்படவேண்டிய இயந்திரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்டு இருந்தது.
இதன்படி சம்பந்தப்பட்ட மாநில தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, விண்ணப்பதாரர்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அ-து. 2024, ஜூலை 4-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதற்கு 15 நாட்களுக்கு முன்பாக உற்பத்தியாளர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026967
***
AD/MM/RS/RR/DL
(Release ID: 2027136)
Visitor Counter : 84