மத்திய அமைச்சரவை

மகாராஷ்டிர மாநிலம் வாதவனில் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற பசுமைத் துறைமுகத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 JUN 2024 7:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாராஷ்டிராவின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம்  மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் இணைந்து இந்தத் துறைமுகத்தை அமைக்க உள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.76,220 கோடியாகும். இந்தத் துறைமுகத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள ஒன்பது சரக்குப் பெட்டக முனையங்கள், கடலோர பெட்டக முனையம் உட்பட நான்கு பல்நோக்கு முனையங்கள் அமைக்கப்படும். இந்தத் துறைமுகத்தில் திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட நோக்கத்துடன் இணைந்த இந்தத் திட்டம், பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும். இத்துறைமுகம் மூலம் சுமார் 12 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026695

***

AD/PLM/KPG/DL



(Release ID: 2026729) Visitor Counter : 92