மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய கல்வியமைச்சராக திரு தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றார்
Posted On:
13 JUN 2024 5:23PM by PIB Chennai
மத்திய கல்வியமைச்சராக திரு தர்மேந்திர பிரதான் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். இவரை உயர் கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரமாக இந்தியாவை நிறுவவும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், எதிர்காலத்திற்கு தயாரான நாடாக இந்தியாவை மாற்றவும், தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கம் முக்கியமானது என்றார். தாமும் தமது அணியினரும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலை இதற்கு எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வித்துறை இணையமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள திரு ஜெயந்த் சௌத்ரி, டாக்டர் சுகந்த மஜூம்தார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த திரு பிரதான், கல்வி, திறன்கள், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் உலகின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு செயல்வடிவம் அளிப்பதற்கு இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025067
***
AD/SMB/RS/DL
(Release ID: 2025161)
Visitor Counter : 70
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam