தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பரவலாகப் பேசப்படும் மும்பை சர்வதேச திரைப்பட விழா: சென்னை, தில்லி, கொல்கத்தா, புனேயிலும் திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்!

Posted On: 12 JUN 2024 5:15PM by PIB Chennai

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா (எம்.ஐ.எஃப்.எஃப்.எஃப்) மும்பை உட்பட பிற நகரங்களையும் சென்றடைகிறது. திரைப்பட விழாவின் இந்தப் பதிப்பு மும்பையில் நடைபெறுவது மட்டுமல்லாமல், முதன்முறையாக சென்னை, தில்லி, கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும்.

முக்கிய நிகழ்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி 21 வரை மும்பையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி)- திரைப்படப் பிரிவு வளாகத்தில் நடைபெறுகிறது. தில்லியில் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்காக, ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை சிரி ஃபோர்ட் கலையரங்குகள் 1, 2 மற்றும் 3-ல் படங்கள் திரையிடப்படும். கொல்கத்தாவில் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (எஸ்.ஆர்.எஃப்.டி.ஐ) திரையிடல்களைக் காணலாம். அதே நேரத்தில் சென்னையில் என்.எஃப்.டி.சியின் தாகூர் திரைப்பட மையத்தில் திரைப்படங்கள் திரையிடப்படும். கூடுதலாக, புனேயில் இந்திய தேசிய ஆவணக் காப்பக வளாகத்தில் திரையிடல்கள் நடைபெறும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் கிடைக்கும்.

இந்தப் புதுமையான நடவடிக்கை, உயர்தர ஆவணப்படத் தயாரிப்பை பரவலான இந்தியப் பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான என்.எஃப்.டி.சியின் உறுதிப்பாட்டால் இயக்கப்படுகிறது. திரைப்பட ஆர்வலர்களிடையே நாடு முழுவதும் உள்ள ஆவணப்படங்களுக்கு ஆழமான ஈடுபாட்டை வளர்ப்பதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2024762)

SMB/BR/RR


(Release ID: 2024951) Visitor Counter : 57