மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

வெப்ப அலை மற்றும் காட்டுத் தீயை எதிர்கொள்வதற்கான ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் நடைபெற்றது

Posted On: 06 JUN 2024 6:20PM by PIB Chennai

வெப்ப அலை மற்றும் காட்டுத்தீயை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கெளபா தலைமை தாங்கினார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமும் முறையே வெப்ப அலை மற்றும் காட்டுத் தீயின் தற்போதைய நிலைமை மற்றும் நாடு முழுவதும் அவற்றைச் சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தன.

வெப்ப அலைகளைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை அதிகரிப்பதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைத் தவறாமல் மதிப்பாய்வு செய்து கண்காணிக்குமாறு அமைச்சரவை செயலாளர் தலைமைச் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். நீர் விநியோக ஆதாரங்களை பராமரிப்பதற்கும் அதிகரிப்பதற்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்றும், அனைத்து நிறுவனங்களின் தீ பாதுகாப்பு தணிக்கை தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மத்திய உள்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, பீகார், சத்தீஷ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.

***

(Release ID: 2023266)

SMB/BR/RR



(Release ID: 2023396) Visitor Counter : 26