தேர்தல் ஆணையம்
அமைதியான தேர்தலை தேசப்பிதாவுக்குத் தேர்தல் ஆணையம் அர்ப்பணித்தது
Posted On:
06 JUN 2024 7:30PM by PIB Chennai
18-வது மக்களவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களைக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்த பின்னர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை ராஜ்காட்டில் தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராஜ்காட்டில் தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
"18 வது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்தும் புனிதமான பணியை முடித்த பின்னர் தேசத் தந்தைக்கு மரியாதை செலுத்துகிறோம்.
தேர்தல் நடைமுறையை வன்முறையின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியின் பின்னணியில் எங்களுக்கு உத்வேகம் அளித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஒரு பண்டிகையைப் போல் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகள் மற்றும் வாக்குச்சீட்டின் மூலம் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உறுதிப்பாடு ஆகியவை மகாத்மாவின் நேசத்துக்குரிய கொள்கைகள் மற்றும் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்திற்கு சான்றாகும்.
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்ட சாமானிய மனிதனின் 'விருப்பம்' மற்றும் 'ஞானம்' வெற்றி பெற்றுள்ளது. சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவதன் மூலம் அதை எப்போதும் நிலைநிறுத்த நாங்கள் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடமைப்பட்டுள்ளோம்.”
***
(Release ID: 2023293)
SMB/BR/RR
(Release ID: 2023394)
Visitor Counter : 76