நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரத் தேவை அதிகமாக இருகும் நிலையில் அனல் மின் நிலையங்களில் போதுமான அளவு நிலக்கரி இருப்பு

Posted On: 01 JUN 2024 11:49AM by PIB Chennai

மிக அதிக மின் தேவை இருந்தபோதிலும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு தொடர்ந்து 45 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகப் பராமரிக்கப்படுகிறதுஇது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% அதிகமாகும்.  19 நாள் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தக் கையிருப்பு போதுமானதுவிநியோகத்திற்கான சீரான மற்றும் போதுமான தளவாட ஏற்பாடுகளை உறுதி செய்வதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளதுமின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய துணைக்குழுவின் அமைப்பு சிறந்த முறையில் விநியோகச் சங்கிலியை பராமரிப்பதில் திறம்பட பங்காற்றுகிறது.

நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டை விட 8% அதிகமாகும்.   சுரங்க முனையில் இருப்பு 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மின் துறைக்கு போதுமான நிலக்கரி உள்ளதுரயில்வே ரேக்குகளின் தினசரி சராசரியாக 9% வளர்ச்சியை ரயில்வே அமைச்சகம் உறுதி செய்துள்ளதுபாரம்பரியமாக பாரதீப் துறைமுகம் வழியாக மட்டுமே நிலக்கரி கொண்டு செல்லப்படுவதால் கடலோர கப்பல் மூலம் வெளியேற்றமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டதுதற்போது நிலக்கரி தளவாடக் கொள்கையின்படி முறையான ஒருங்கிணைப்பின் கீழ், இதன் விளைவாக தாம்ரா மற்றும் கங்காவரன் துறைமுகங்கள் வழியாகவும் நிலக்கரி வெளியேற்றப்பட்டுள்ளதுசோன் நகரில் இருந்து தாத்ரி வரை சரக்கு பெட்டிகள் விரைவாக கொண்டு செல்ல ரயில்வே கட்டமைப்பின் கட்டமைப்பு விரிவாக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது

பருவமழைக் காலங்களில் அனல் மின் நிலையங்களில் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகம் தயாராக உள்ளது. ஜூலை 1, 2024 அன்று, அனல் மின் நிலைய முடிவில் 42 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/PKV/KV

 


(Release ID: 2022429) Visitor Counter : 97