ஜல்சக்தி அமைச்சகம்

மக்கள் தகவல் தொடர்புப் பணி அனுபவப் பயிற்சித் திட்டத்தை ஜல் சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது

Posted On: 31 MAY 2024 1:07PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை, மக்கள் தகவல் தொடர்புப் பணி அனுபவப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் இளநிலை / முதுநிலை படிப்புகளைத் தொடரும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஆராய்ச்சி அறிஞர்களாக இருக்கும் மாணவர்களைப் பயிற்சியாளர்களாக ஈடுபடுத்த இது முயல்கிறது.

பணி அனுபவப் பயிற்சித் திட்டம், ஊடகம் / சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பான துறையின் பணிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுகிய காலம் ஈடுபட அனுமதிக்கிறது. மக்கள் தகவல் தொடர்பியல் அல்லது இதழியல் அல்லது தொடர்புடைய துறைகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்லூரி / பல்கலைக்கழகத்திலிருந்தும் மேற்கூறிய துறைகளில் முதுநிலை அல்லது பட்டயப்படிப்பைத் (மக்கள் தகவல் தொடர்பியல் அல்லது தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பை முடித்திருப்பது  உட்பட்டது) தொடரும் மாணவர்கள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியுடையவர்களாவர்

பணி அனுபவப் பயிற்சிக் காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை இருக்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் ரூ.15,000/- மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29, 2024. பணி அனுபவப் பயிற்சிக்கு இணையவழி (https://mowr.nic.in/internship/) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும்  விவரங்களுக்கு, https://jalshakti-dowr.gov.in/ என்ற இணையதள முகவரியை அணுகவும்.

***

(Release ID: 2022270)

SMB/BR/RR



(Release ID: 2022305) Visitor Counter : 61