பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐ.நா. அமைதி காக்கும் படையின் 76-வது சர்வதேச தினத்தை இந்திய ராணுவம் நினைவு கூர்ந்தது

Posted On: 29 MAY 2024 2:45PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் 76-வது சர்வதேச தினத்தை இந்திய ராணுவம் இன்று நினைவு கூர்ந்தது. புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, உயிரிழந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவ துணைத் தளபதி (தகவல் அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு) லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1948 ஆம் ஆண்டு இதே நாளில் .நா அமைதி காக்கும் பணியான ".நா போர்நிறுத்த மேற்பார்வை அமைப்பு" பாலஸ்தீனத்தில் செயல்படத் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், .நா மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகள் .நா அமைதி காக்கும் பணிகளில் பணியாற்றிய / பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன. அமைதிக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் தியாகங்களின் நினைவையும் இந்த நாள் கௌரவிக்கிறது.

.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா வளமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. அமைதி காக்கும் பணிகளில் இந்தியா சுமார் 2,87,000 துருப்புகளை வழங்கியுள்ளது. இது மிகப்பெரிய பங்களிப்பாகும். இந்திய ராணுவ வீரர்கள் கடினமான, சவாலான நிலப்பரப்பு மற்றும் செயல்பாட்டு நிலைமைகளின் கீழ் செயல்பட்டுள்ளனர். .நா.வின் ஆணைகளை நிலைநிறுத்த மிக உயர்ந்த தியாகம் செய்யும் அளவிற்கு முன்மாதிரியான தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட 160 இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்திய ஆயுதப்படைகள் ஒன்பது நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

.நா., புரவலர் நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளின் திறன் மேம்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. சுறுசுறுப்பான மற்றும் நெகிழ்வான அலகுகள், அமைதி காக்கும் பயிற்சி, தளவாட ஆதரவு, பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு பங்களிப்பதன் மூலம் .நா.வின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா எப்போதும் பாடுபட்டு வருகிறது. பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிவில் ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் திறன் மேம்பாட்டிற்கு இந்தியா செயலில் ஆதரவை வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்திய ராணுவத்தின் காலாட்படை பல்வேறு .நா பணிகளில் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. சூடானில் உள்ள காலாட் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் குர்பிரீத் சிங் பாலி அபேயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் .நா தலைமையகத்தால் பாராட்டப்பட்டன.

அமைதி காக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பயிற்சி அளிப்பதற்காக இந்திய ராணுவம் புதுதில்லியில் .நா அமைதி காக்கும் மையத்தை (சி.யு.என்.பி.கே) நிறுவியுள்ளது. இந்த மையம் ஒவ்வொரு ஆண்டும் 12,000 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. .நா. அமைதி காக்கும் பயிற்சித் துறையில் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக நட்பு நாடுகளுக்கு நடமாடும் பயிற்சிக் குழுக்களை இந்த மையம் தொடர்ந்து அனுப்பி வைக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்நிறுவனம் திறன்மிகு மையமாகவும், அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளின் களஞ்சியமாகவும் உருவெடுத்துள்ளது.

.நா. பணிகளில் இந்திய குழுக்களின் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இந்திய ராணுவம் அதிநவீன உபகரணங்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இவை கடினமான நிலப்பரப்பு, வானிலை மற்றும் செயல்பாட்டு நிலைமைகளின் மாறுபாடுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவை.

பணிகளில் உள்ளூர் பெண்களின் கவலைகளை சிறப்பாக நிவர்த்தி செய்வதற்காக பாலின சமத்துவ இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண் அமைதி காக்கும் படையினரின் பங்களிப்பை அதிகரிக்க .நா கட்டாய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. .நா.வின் உன்னத முன்முயற்சிக்கு முழு ஆதரவளிக்கும் வகையிலும், நாரி சக்தி முன்முயற்சியுடன் ஒத்திசைவாகவும், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் அபய் (லைபீரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இந்திய பெண்கள் படைப்பிரிவு) ஆகியவற்றில் பெண் ஈடுபாட்டுக் குழுக்களை இந்தியா நிறுத்தியுள்ளது. மேஜர் ராதிகா சென் .நா தலைமையகத்தால் "2023 ஆம் ஆண்டின் ராணுவ பாலின ஆர்வலர்" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இது .நா அமைதி காக்கும் முயற்சிகளில் இந்தியப் பெண்களின் நேர்மறையான பங்களிப்புக்கு ஒரு சான்றாகும்.

கானாவின் அக்ராவில் 2023 டிசம்பர் 05-06 தேதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சக கூட்டத்தில், .நா.வின் எதிர்கால அமைதி காக்கும் முயற்சிகளுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  

***

(Release ID: 2022052)

AD/PKV/AG/RR


(Release ID: 2022070) Visitor Counter : 80