விவசாயத்துறை அமைச்சகம்

செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், 'தூர்தர்ஷன்'

Posted On: 24 MAY 2024 9:46AM by PIB Chennai

9 வருட மகத்தான வெற்றிக்குப் பிறகு, டிடி கிசான் அலைவரிசை, மே 26, 2024 அன்று, ‘செயற்கை நுண்ணறிவு’ மூலம் ஒரு புதிய தோற்றம் மற்றும் புதிய பாணியில் இந்திய விவசாயிகளைச் சென்றடையவிருக்கிறது.

'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ) என்ற இந்த சகாப்தத்தில், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஐ தொகுப்பாளருடன் கூடிய நாட்டின் முதல் அரசு தொலைக்காட்சி அலைவரிசையாக தூர்தர்ஷன் கிசான் மாறப் போகிறது. இரண்டு ஏ.ஐ அறிவிப்பாளர்களை (ஏ.ஐ க்ரிஷ் மற்றும் ஏ.ஐ பூமி) தூர்தர்ஷன் கிசான் அறிமுகப்படுத்தப் போகிறது. கணினியான  இந்த செய்தி அறிவிப்பாளர்களால் ஒரு மனிதனைப் போலவே செயல்பட முடியும். 365 நாட்களும், 24 மணி நேரமும், இடைவிடாமல் அவர்களால் செய்திகளை வாசிக்க முடியும்.

காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலும், குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த அறிவிப்பாளர்களை விவசாயிகள் காண முடியும். இந்த செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர்கள், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் வேளாண் ஆராய்ச்சி, விவசாய மண்டிகளின் போக்குகள், வானிலை மாற்றங்கள் அல்லது அரசுத் திட்டங்கள் தொடர்பான வேறு ஏதேனும் தகவல்கள் பற்றிய தேவையான அனைத்து செய்திகளையும்  வழங்குவார்கள். இந்த அறிவிப்பாளர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் ஐம்பது மொழிகளில் பேச முடியும்.

டிடி கிசான் அலைவரிசையின்  நோக்கங்களில் சில சிறப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன-

இந்திய அரசால் நிறுவப்பட்டு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே தொலைக்காட்சி அலைவரிசை என்ற பெருமையை  டிடி கிசான் பெற்றுள்ளது. இந்த தொலைக்காட்சி, மே 26, 2015 அன்று நிறுவப்பட்டது.

 

டிடி கிசான் அலைவரிசை நிறுவப்பட்டதன் நோக்கம், வானிலை மாற்றங்கள், உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தைகள் போன்றவற்றைப் பற்றி விவசாயிகளுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்துவதாகும். இதனால் விவசாயிகளால் முன்கூட்டியே பொருத்தமான திட்டங்களை உருவாக்கவும், சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கவும் முடியும். டிடி கிசான் அலைவரிசை கடந்த 9 ஆண்டுகளாக இந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்து வருகிறது.

நாட்டில் உள்ள விவசாய மற்றும் கிராமப்புற சமூகத்திற்கு சேவை செய்வதையும், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் முழுமையான வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும், முற்போக்கு விவசாயிகளின் முயற்சிகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் டிடி கிசான் ஈடுபட்டு வருகிறது.

சமச்சீர் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் தோட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாயத்தின் முப்பரிமாண கருத்தாக்கத்தை டிடி கிசான் வலுப்படுத்துகிறது.

***

(Release ID: 2021431)

SRI/BR/RR



(Release ID: 2021438) Visitor Counter : 82