உள்துறை அமைச்சகம்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபர் டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2024 5:27PM by PIB Chennai
ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபர் டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2024, மே 21 (செவ்வாய்க்கிழமை) அன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்து கட்டடங்களிலும் நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
*****
ANU/SRI/IR/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2021138)
வருகையாளர் எண்ணிக்கை : 117