தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 4

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரத் பர்வ் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது

சினிமாவின் பிரம்மாண்டமான கொண்டாட்டமான 77 வது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு தலைமையில் இந்திய சினிமாவுடன் இந்தியாவின் வளமான கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்களைக் கொண்டாடும் பாரத் பர்வ் என்ற மாலை நேர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய அரசின் தகவல் லிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய் இந்த நிகழ்வு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, உணவு வகைகளை உண்டு மகிழ்ச்சிக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

கோவாவில் நடைபெறவுள்ள 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பான அறிமுக நிகழ்ச்சியும் திரு சஞ்சய் சாஜூ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர்கள் அசோக் அமிர்தராஜ், ரிச்சி மேத்தா, பாடகர் ஷான், நடிகர் ராஜ்பால் யாதவ்,  நடிகர் பாபி பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய விருந்தோம்பலின் உள்ளார்ந்த அரவணைப்பை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் நிகழ்ச்சிக்கான உணவு வகைகள் பிரபல சமையல் கலை வல்லுநர் வருண் டோட்லானி தலைமையில் தயாரிக்கப்பட்டன.

பாடகி சுனந்தா சர்மா, வளர்ந்து வரும் பாடகர்களான பிரகதி, அர்ஜுன் மற்றும் மாஹி ஆகியோர் பஞ்சாபி பாடல்களை பாடினர். இது பங்கேற்பாளர்களின் உற்சாகமான  வரவேற்பை பெற்றது.

நடிகை ஷோபிதா துலிபாலா, அசாமிய நடிகை அமி பராவா, திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

 இந்திய கலாச்சாரத்தை உலக அரங்கில் எடுத்துரைக்கும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

***

(Release ID: 2020880)

AD/PLM/AG/RR

iffi reel

(Release ID: 2020895) Visitor Counter : 85