பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா-பங்களாதேஷ் இருதரப்புக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
17 MAY 2024 1:47PM by PIB Chennai
இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ், பங்களாதேஷின் நான்கு திறன் மேம்பாட்டு நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் பங்களாதேஷ் பொது நிர்வாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய அகாடமியின், தலைமை இயக்குநர் (செயலாளர்) திரு சுகேஷ் குமார் சர்க்கார், ஆகியோருக்கிடையேயான இருதரப்பு சந்திப்பு 2024 மே 16 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்களாதேஷ் பொது நிர்வாக பயிற்சி மையத்தின் செயலாளர் முகமது அஷ்ரப் உதீன், பங்களாதேஷ் குடிமைச் சேவை நிர்வாக அகாடமியின் செயலாளர்கள் டாக்டர் முகமது உமர் ஃபரூக், டாக்டர் முகமது ஷாஹிதுல்லா, பங்களாதேஷ் தேசிய மேம்பாட்டு நிர்வாக அகாடமி மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் எம் ஜியாவுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியத் தரப்பிலிருந்து வேளாண் ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு இயக்கத்தின் இணைச் செயலாளர் திரு என்.பி.எஸ். ராஜ்புத், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் மூத்த அதிகாரிகள், பங்களதேஷுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
விவாதங்களைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மூத்த அரசு ஊழியர்களுக்கான ஒரு வார திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும், பங்களாதேஷ் குடிமைச் சேவை நிர்வாக அகாடமி, பங்களாதேஷ் தேசிய மேம்பாட்டு நிர்வாக அகாடமி ஆகியவற்றின் ஆசிரிய உறுப்பினர்களுக்கு இரண்டு வார திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த நல்ல நிர்வாகத்திற்கான தேசிய மையம் ஒப்புக் கொண்டுள்ளது. 2024, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பங்களாதேஷின் மூத்த அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட 71 திறன் மேம்பாட்டு திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு நல்ல நிர்வாகத்திற்கான தேசிய மையம் ஏற்பாடு செய்யும். 27-வது தேசிய மின்-ஆளுமை மாநாட்டிற்கு, விருது பெற்ற பங்களாதேஷ் அரசு ஊழியர்களை பேச்சாளர்களாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அழைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-----
(Release ID: 2020870)
AD/SMB/KPG/RR
(Release ID: 2020886)
Visitor Counter : 69