தேர்தல் ஆணையம்

ஸ்ரீநகர் தொகுதியில் இரவு 8 மணி நிலவரப்படி, 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 36.58% வாக்குகள் பதிவு

Posted On: 13 MAY 2024 8:45PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், 18 வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஸ்ரீநகர், கந்தர்பால், புல்வாமா மற்றும் பட்காம் & ஷோபியன் மாவட்டங்களில் இரவு 8 மணி நிலவரப்படி 36.58% வாக்குகளுடன் அமைதியாக முடிவடைந்தது. ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 2,135 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, ஆர்வமுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 ஸ்ரீநகர், பட்காம், கந்தர்பால், புல்வாமா மற்றும் ஷோபியான் வாக்காளர்கள் தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைக் காட்டும் வகையில் சாதனை எண்ணிக்கையில் வாக்களித்தனர். 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இயற்றப்பட்ட பின்னர் பள்ளத்தாக்கில் நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். வாக்குச்சாவடிகளில் அமைதியும், கொண்டாட்டமும் நிறைந்த சூழல் நிலவுவதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட வாக்குச்சாவடிப் பணியாளர்கள் அயராது உழைத்தனர்.

17.47 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய 8,000 க்கும் அதிகமான வாக்குச்சாவடி ஊழியர்கள் பணியில் இருந்தனர். சுதந்திரமான, நியாயமான மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களை உறுதி செய்வதற்காக 2024 பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட மார்ச் 16-ஆம் தேதி முதல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் கட்டுப்பாட்டு மையங்கள் 24x7 செயல்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், தண்ணீர், மின்சாரம், கழிப்பறை, சாய்வுதளம், காத்திருப்பு அறை போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள். அனைவரையும் உள்ளடக்கிய வாக்களிப்பை உறுதி செய்வதற்காக, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

தில்லி, ஜம்மு மற்றும் உதம்பூரில் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் வசிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த வாக்காளர்கள் நியமிக்கப்பட்ட சிறப்பு வாக்குச் சாவடிகளில் நேரில் வாக்களிக்க அல்லது தபால் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தையும் ஆணையம் அனுமதித்துள்ளது. ஜம்முவில் 21 சிறப்பு வாக்குச் சாவடிகள், உதம்பூரில் 1 மற்றும் தில்லியில் 4 சிறப்பு வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

***

SRI/RR/KR



(Release ID: 2020516) Visitor Counter : 38