தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

நான்காம் கட்டத் தேர்தல்: இரவு 11.45 மணி நிலவரப்படி 67.25 % வாக்குப்பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2024 11:58PM by PIB Chennai

4-ம் கட்டத் தேர்தலில், இரவு 11.45 மணி நிலவரப்படி, 67.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குச்சாவடி வாரியாகவும், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாகவும்,  முந்தைய கட்டங்களில் இருந்ததைப் போலவே விடிஆர் பயன்பாட்டில் கள அளவிலான அதிகாரிகளால் இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

 

இரவு 11:45 மணிக்கு மாநில வாரியான தோராய வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு:

 

வ.எண்

மாநிலம்

தொகுதிகள்

வாக்கு சதவீதம்

1

ஆந்திரப் பிரதேசம்

25

76.50

2

பீகார்

5

57.06

3

ஜம்மு காஷ்மீர்

1

37.98

4

ஜார்கண்ட்

4

65.20

5

மத்தியப் பிரதேசம்

8

70.98

6

மகாராஷ்டிரா

11

59.64

7

ஒடிசா

4

73.97

8

தெலுங்கானா

17

64.74

9

உத்தரப் பிரதேசம்

13

58.05

10

மேற்கு வங்காளம்

8

78.37

 

மொத்தம்

96

67.25

 

இங்கு காட்டப்படும் தரவுகள் கள அலுவலரால் கணினிகளில் நிரப்பப்படும் தகவல்களின்படி உள்ளன. இது ஒரு தோராயமான போக்கு, ஏனெனில் சில வாக்குச் சாவடிகளின் தரவுகளை அளிக்க கால தாமதம் ஏற்படும். மேலும் இந்த போக்கு அஞ்சல் வாக்குச்சீட்டை உள்ளடக்காது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் இறுதி உண்மையான கணக்கு படிவம் 17C-ல் வாக்குப்பதிவு முடிவில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுடனும் பகிரப்படுகிறது.

 

***

PKV/RR/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2020515) வருகையாளர் எண்ணிக்கை : 139
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Hindi_MP , Assamese , Bengali , Manipuri , Punjabi