தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணைய மோசடி செய்பவர்களை எதிர்த்துப் போராட தொலைத் தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம், மாநில காவல்துறை ஆகியவை கைகோர்த்துள்ளன

प्रविष्टि तिथि: 10 MAY 2024 1:21PM by PIB Chennai

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தொலைத் தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம், மாநில காவல்துறை ஆகியவை கைகோர்த்துள்ளன. இந்தக் கூட்டு முயற்சி மோசடி செய்பவர்களின் நெட்வொர்க்குகளை அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்துறை அமைச்சகம், மாநில காவல்துறை, தொலைத் தொடர்புத் துறை நடத்திய ஆய்வில், 28,200 மொபைல் போன்கள் சைபர் குற்றங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இவற்றில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது இதையடுத்து,  நாடு முழுவதும் 28,200 மொபைல் போன்களை முடக்கவும், இந்த மொபைல் போன்களுடன் இணைக்கப்பட்ட 20 லட்சம் மொபைல் இணைப்புகளை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யவும், இது சரியில்லை என்றால் தொடர்பை துண்டிக்கவும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

***

SMB/AG/KR


(रिलीज़ आईडी: 2020217) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada