தேர்தல் ஆணையம்
11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3 ஆம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது
Posted On:
07 MAY 2024 8:43PM by PIB Chennai
11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 3 ஆம் கட்ட தேர்தல் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடந்ததில், இரவு 8 மணி நிலவரப்படி 61.45% வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று வாக்குகளை செலுத்தினர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தது.
3 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இதுவரை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 283 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தம் 1331 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
3-வது கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள், நாடாளுமன்றத் தொகுதி வாரியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இது தவிர வாக்குப்பதிவு சதவீதத்தை அறியும் விடிஆர் செயலியும் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 6 மணியளவில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரிசைகளில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அவர்கள் வாக்களிக்கும் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019889
***
PKV/RR/KR
(Release ID: 2019909)
Visitor Counter : 84
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Malayalam