குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அறிவு, கல்வியின் மையமாக திகழும் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நிலையை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார்

प्रविष्टि तिथि: 06 MAY 2024 1:41PM by PIB Chennai

அறிவு, கல்வியின் மையமாக திகழும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் எடுத்துரைத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கற்றல் பள்ளியின் 62-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நாடு தனது கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளது என்று உறுதிபடக் கூறினார். நாளந்தா, ட்சீலா போன்ற கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட அவர், சமகாலத்தில் இந்தியாவின் கல்வி நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள முன்னுதாரண மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்கள் உட்பட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு கற்போருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் தளத்தை வழங்கியதற்காக திறந்த வெளிப் பள்ளி நிறுவனத்தைப் பாராட்டினார்.

கடந்தகால சூழ்நிலைகளால் கற்பதற்கான வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு திறந்த வெளிப் பள்ளி நிறுவனம் மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இது அவர்களுக்கு இடையூறு இல்லாமல் கல்வியைத் தொடர உதவுகிறது என்று குறிப்பிட்டார்.  முன்னதாக முறையான கல்வியைத் தவறவிட்டவர்களுக்கு 2-வது வாய்ப்பை வழங்கியதற்காகவும், விளிம்புநிலை சமூகங்களுக்கு அறிவு மற்றும் திறன்கள் மூலம் அதிகாரம் அளித்ததற்காகவும், அதன் மூலம் உண்மையான உள்ளடக்கிய சூழலை வளர்த்ததற்காகவும் திறந்த வெளிப் பள்ளி நிறுவனத்தைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்களின் அமைப்பு மற்றும் தரத்தை வடிவமைப்பதில் உள்கட்டமைப்பை விட ஆசிரியர்களின் முக்கிய பங்கை திரு தன்கர் மேலும் வலியுறுத்தினார்.

"கல்வி என்பது மிகப்பெரிய உரிமை மற்றும் நன்கொடை என்று கூறிய அவர், கல்வியை விட பெரிய அடிப்படை உரிமை எதுவும் இருக்க முடியாது என்றும், கல்வியை விட எந்த நன்கொடையும் பெரியதாக இருக்க முடியாது" என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் சுமூகமாக தரையிறங்கிய சந்திரயான் பயணம் குறித்து குறிப்பிட்ட திரு தன்கர், தோல்வியை வெற்றிக்கான திறவுகோலாக கருதுமாறு மாணவர்களை வலியுறுத்தினார். நவீன உலகின் சிக்கல்களை கையாள்வதில் நெகிழ்திறன் கொண்ட மனநிலையின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் கல்வித் தளத்தில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய பங்கை எடுத்துரைத்த திரு தன்கர், தேசிய கல்விக் கொள்கை மாற்றத்துக்கான தாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது என்றும், முழுமையான கற்றல் மேம்பாட்டுக்கான பாதையை வகுக்கிறது என்றும், 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குகிறது என்றும் கூறினார். நெகிழ்வான கற்றல் பாதைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரித்தல் ஆகியவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார்.

திறந்தவெளிக் கற்றல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் தரமான கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதிலும், தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்கு பார்வையின்படி நீண்டகால இடைவெளிகளை நிரப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று திரு தன்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கற்றல் வளாக இயக்குநர் பேராசிரியர் பாயல் மாகோ, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID 2019723)

ANU/AD/IR/KPG/RR


(रिलीज़ आईडी: 2019736) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Odia , Telugu , Kannada