தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

இந்திய தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில், 23 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் 75 சர்வதேச பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையைக் காண வந்துள்ளனர்

Posted On: 04 MAY 2024 1:44PM by PIB Chennai

நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் கலங்கரை விளக்கமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மிக உயர்ந்த தரத்துடன் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது, உலகளாவிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு, ஜனநாயகச் சிறப்பை நேரடியாகக் காண அது ஒரு தங்கப் பாலத்தை வழங்குகிறது. நடப்பு மக்களவைத் தேர்தல் 2024-ன் போதுத்தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையம் சர்வதேச ஒத்துழைப்பை தொடர்ந்து வளர்த்து வருகிறது.

பங்கேற்பு அளவின்  அடிப்படையில் இந்த நிகழ்வு முதல் முறையாக இருக்கும். பூட்டான், மங்கோலியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஃபிஜி, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, மால்டோவா, துனிசியா, செஷல்ஸ், கம்போடியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். தேர்தல் அமைப்புகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பூட்டான் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த ஊடகக் குழுக்களும் பங்கேற்கும்.

மே மாதம் 4 -ம் தேதி தொடங்கி, இந்தத் திட்டம் வெளிநாட்டு தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு இந்தியாவின் தேர்தல் அமைப்பின் நுணுக்கங்களையும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு பயன்படுத்தும் சிறந்த நடைமுறைகளையும் பரிச்சயப்படுத்த முயல்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்  திரு கியானேஷ் குமார், டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர்  மே 5 அன்று பிரதிநிதிகளிடையே உரையாற்றுவார்கள். அதன்பிறகு, பிரதிநிதிகள் மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு சிறிய குழுக்களாகப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தொகுதிகளில் தேர்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிப்பார்கள். இந்த நிகழ்ச்சி  மே 9 -ம் தேதி முடிவடையும்.

*****

AD/PKV/DL


(Release ID: 2019642) Visitor Counter : 164