தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

முதல் கட்டத் தேர்தலில் 66.14 சதவீதமும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவு

முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Posted On: 30 APR 2024 8:01PM by PIB Chennai

மக்களவைத் தேர்தலில் கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளில்  நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவீத வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். 26-ம் தேதி 88 தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த தரவுகளை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், முதல் கட்டத் தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.22 சதவீதமும், பெண் வாக்காளர்களில் 66.07 சதவீதமும் வாக்குகளை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது. மூன்றாம் பாலின வாக்காளர்களில் 31.32 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் ஆண் வாக்காளர்களில் 66.99 சதவீதமும், பெண் வாக்காளர்களில் 66.42 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்களில் 23.86 சதவீதமும் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்களில் 69.59 சதவீதத்தினரும், பெண்களில் 69.86 சதவீதத்தினரும், பிற பாலினத்தில் 32.08 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில்  78.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண் வாக்காளர்களில் 78.64 சதவீதத்தினரும், பெண் வாக்காளர்களில் 79.13 சதவீதத்தினரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 69.54 சதவீதத்தினரும் முதல் கட்டத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும் பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

விரிவான விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019225

***

PKV/RS/RR


(Release ID: 2019258) Visitor Counter : 115