பாதுகாப்பு அமைச்சகம்
நாகாலாந்தில் இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் ஏராளமான வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை அசாம் ரைபிள்ஸ் கைப்பற்றியது
Posted On:
29 APR 2024 9:55PM by PIB Chennai
ரகசிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் 2024, ஏப்ரல் 29 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் இந்தோ - மியான்மர் எல்லைக்கு அருகில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றியது. அதிகாலையில் தொடங்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். மேலும் 11 மோட்டார் குழாய்கள் (81 மிமீ), 04 டியூப்கள் (106 மிமீ), 10 கைத்துப்பாக்கிகள், 198 கையடக்க ரேடியோ பெட்டிகள், ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி, ஒரு கென்போ பைக், ஒரு பொலேரோ வாகனம் உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
எல்லைப் பகுதிக்கு அருகில் இந்தக் கனரக திறன், ராணுவ தர ஆயுதங்களை மீட்டெடுத்தது அசாம் ரைபிள்ஸ் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கு ஒரு பெரிய வெற்றியாகும். பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் தேச விரோத சக்திகளின் தீய திட்டங்களுக்கு இந்த மீட்பு ஒரு பெரிய அடியாகும். ராணுவத் தரத்திலான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடிய சேதத்தின் அளவையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.
கைது செய்யப்பட்ட நபருடன் மீட்கப்பட்ட பொருட்களும் நாகாலாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அசாம் ரைபிள்ஸின் எச்சரிக்கை மற்றும் தீவிரக் கண்காணிப்புக் காரணமாக சட்டவிரோத பிரிவுகளின் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
********
(Release ID: 2019111)
PKV/KPG/RR
(Release ID: 2019126)