மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 APR 2024 12:02PM by PIB Chennai

2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற  தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3  அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்க்க தேசிய பாதுகாப்பு அகாடமியின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நேர்காணல் மற்றும் கடற்படை அகாடமி நடத்திய நேர்காணல் ஆகியவற்றின் முடிவுகள் அடிப்படையில் தகுதி பெற்ற 699 விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் www.joinindianarmy.nic.inwww.joinindiannavy.gov.in www.careerindianairforce.cdac.in ஆகிய வலைத்தளங்களைக் காணவும்.

இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் https://www.upsc.gov.in தேர்வு முடிவுகளைக் காணலாம். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு வேட்பாளர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017021 

***

SRI/SMB/AG/RR


(रिलीज़ आईडी: 2017035) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati