பிரதமர் அலுவலகம்

பிரதமரின் பூடான் அரசுமுறைப் பயணம் குறித்த கூட்டறிக்கை

Posted On: 22 MAR 2024 7:18PM by PIB Chennai

பல நூற்றாண்டுகளாக இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நெருக்கமான நட்பு மற்றும் ஒத்துழைப்பை அனுபவித்து வருகின்றன. நமது கலாச்சார இணைப்புகள் மற்றும் பொதுவான புவியியல் நம்மை இணைக்கிறது. வலுவான பொருளாதாரம் மற்றும் நிதி உறவுகள் நம்மைப் பிணைக்கின்றன. பாரதம் மற்றும் பூடான் மக்களுக்கு இடையேயான நெருங்கிய நட்புறவு நமது நட்பின் இதயமாக உள்ளது. நமது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் அண்டை நாடுகளுடனான உறவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நமது இரு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த கூட்டாண்மை, நமது பொதுவான விழுமியங்கள், நமது பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பூட்டானுக்கு பாரதம், பாரதத்திற்கு பூட்டான் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது.

நமது பரஸ்பர பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து நாங்கள் திருப்தி தெரிவித்துக் கொள்கிறோம். நமது தேசிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

நமது தனித்துவமான மற்றும் சிறப்பு உறவுகளை மேம்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டாண்மையை நாம் ஒன்றாக பின்பற்றுவோம். ரயில் இணைப்புகள், சாலைகள், விமானம், நீர்வழிகள், சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற எல்லை தாண்டிய போக்குவரத்துக்கான வர்த்தக உள்கட்டமைப்பு, பொருளாதாரம், டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றின் மூலம் பரந்த வடிவத்தில் தொடர்புகளை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

1961-ம் ஆண்டு பூடானின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பூடானுடனான இந்தியாவின் வளர்ச்சிக் கூட்டாண்மை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், பல்வேறு துறைகள் மற்றும் பிராந்தியங்களில் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது. இந்தியாவின் அணுகுமுறையான 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், பூடானின் மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற தத்துவத்தின் சங்கமமாக நமது வளர்ச்சி கூட்டாண்மை உள்ளது. பூடான் மக்கள் மற்றும் பூடான் அரசின் முன்னுரிமைகள் மற்றும் மேதகு மன்னரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப எங்களது வளர்ச்சிக்கான கூட்டாண்மையை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம்.

நமது எரிசக்தி ஒத்துழைப்பு, பரஸ்பரம் பயனளிக்கும் ஆழமான பொருளாதார ஈடுபாட்டின் வெளிப்படையான எடுத்துக்காட்டாக உள்ளது. நீர் மின்சாரம், சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் தூய்மையான எரிசக்தி கூட்டாண்மையை விரிவுபடுத்துவதுடன், இந்த மண்டலத்தில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இரு நாடுகளின் தொழில்நுட்ப வலிமை, வர்த்தகத் துறையின் எழுச்சி ஆகியவற்றை நெறிப்படுத்தும் புதிய திட்டங்களை கூட்டாக உருவாக்குவோம். இந்த விஷயத்தில், இந்தியா-பூடான் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

நமது நாடுகள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், விரைவான பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே நமது கூட்டு முயற்சியாக இருக்கும். விண்வெளி தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதிய தொழில்கள், செயற்கை நுண்ணறிவு, தூய்மையான எரிசக்தி, கல்வி மற்றும் டிஜிட்டல் திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நமது ஈடுபாட்டை தீவிரப்படுத்துவோம்.

*********

PKV/RR/KV

 



(Release ID: 2016302) Visitor Counter : 55