மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நாடு முழுவதும் டிஜிட்டல் செயல்பாட்டைப் பரப்ப நாளை உலகளாவிய ஏற்பு தினத்தில் பாஷாநெட் இணையதளத்தை இந்திய தேசிய இணையதள பரிமாற்றம் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை தொடங்கி வைக்கின்றன
प्रविष्टि तिथि:
20 MAR 2024 3:26PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2024 மார்ச் 21 அன்று நடைபெறவுள்ள உலகளாவிய ஏற்பு தினத்திற்கான பாஷாநெட் இணையதளத்தை தொடங்குவதை அறிவிப்பதில் இந்திய தேசிய இணைய பரிமாற்றம் பெருமிதம் கொள்கிறது. இது உலகளாவிய ஏற்பை ஊக்குவிப்பதையும், நாடு முழுவதும் டிஜிட்டல் செயல்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கூட்டு உறுதிப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது.
"பாஷாநெட்: உலகளாவிய ஏற்பை தூண்டுதல்" என்பது நிகழ்வின் கருப்பொருளாகும். மொழி அல்லது எழுத்து வடிவத்தைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் டிஜிட்டல் உலகில் முழுமையாகப் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான இந்திய தேசிய இணையதள பரிமாற்றத்தின் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.
***
PKV/IR/RS/KRS/DL
(रिलीज़ आईडी: 2015743)
आगंतुक पटल : 145