பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2024 6:35PM by PIB Chennai
ரஷ்யாவின் அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா -ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"ரஷ்ய அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்தி சார்ந்த கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம்."
-----
ANU/SM/PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2015430)
வருகையாளர் எண்ணிக்கை : 358
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam