குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் திரு நாராயண் ரானே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் – தொழில்நுட்ப மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 11 MAR 2024 6:08PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மையத்திற்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே, இன்று அடிக்கல் நாட்டினார். சிந்துதுர்க் ஆத்யோகிக் பெருவிழா, சுயவேலைவாய்ப்பு மாநாடு ஆகியவற்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகும் வகையில், நாடு முழுவதும் 20 புதிய தொழில்நுட்ப மையங்களும், 100 விரிவாக்க மையங்களும் மத்திய அரசால் அமைக்கப்படும். சிந்துதுர்க்கில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொழில்நுட்ப மையம் ரூ.182 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது பொறியியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும். அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ரானே, 2030-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறினார் சிந்துதுர்க்கில் உள்ள தொழில்நுட்ப மையம் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் மேம்பட்ட பயிற்சி அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிப்பதுடன், உணவுப் பதப்படுத்துதல் இப்பகுதியில் ஒரு பெரிய தொழில் நடவடிக்கையாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.

திரு நாராயண் ரானே பிரதமர் விஸ்வகர்மா குறித்த கண்காட்சியையும் திறந்து வைத்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

***

(Release ID: 2013494)

AD/IR/RS/KRS



(Release ID: 2013541) Visitor Counter : 67