கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "சுபாஷ் அபிநந்தன்" டிஜிட்டல் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 11 MAR 2024 1:26PM by PIB Chennai

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் தனது 134-வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், சட்டம், நீதி (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள், கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "சுபாஷ் அபிநந்தன்" என்ற டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு மேக்வால், அமிர்தகாலத்தின் இக் காலகட்டத்தில், நமது வேர்களை வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கவும், நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த நமது வரலாற்றை சித்தரிப்பது, படிப்பது, எழுதுவது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று கூறினார்.  பாரம்பரியம், வளர்ச்சி மற்றும் இந்தியாவை அனைத்துத் துறையிலும் உலகத் தலைமைத்துவமாக மாற்றுவது நமது நோக்கம் என்றும் ஆவணக் காப்பகத் துறை அந்தத் திசையில் பெரும் பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தனிப்பட்ட ஆவணங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நேதாஜி இணையதளம் (http://www.netajipapers.gov.in/) மற்றும் அபிலேக் படல் (https://www.abhilekh-patal.in/jspui/) ஆகியவற்றில் அணுகலாம். இந்த பதிவுகளில், அவர் எழுதிய கடிதங்கள், அவரது தந்தை ஸ்ரீ ஜானகி நாத் போஸின் நாட்குறிப்பு, ஆசாத் ஹிந்த் ஃபவுஜின் ஆவணங்கள் மற்றும் அவர் தொடர்பான பல அரசு ஆவணங்கள் உள்ளன.

இந்தக் கண்காட்சியில் அவரது பிறப்பு முதல் தற்போது வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய 16 பிரிவுகள் உள்ளன. ஜானகி நாத் போஸின் நாட்குறிப்பு, அவரது பிறப்பு, அவரது குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விஷயங்களைக் காட்சிப்படுத்தும் ஆவணங்கள் மூலம் அவரது வாழ்க்கையின் ஒரு பார்வையை இது வழங்குகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2013358

***

AD/IR/RS/KV

 


(रिलीज़ आईडी: 2013416) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu