பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
07 MAR 2024 7:48PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2024-25 பருவத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.5,335/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 285 அதிகமாகும். இது அகில இந்திய சராசரி உற்பத்திச் செலவில் 64.8 சதவீத வருவாயை உறுதி செய்யும்.
கடந்த 10 ஆண்டுகளில், கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2014-15 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,400 லிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ .5,335 / - ஆக உயர்த்தி, 122 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு 2023-24 பருவத்தில், சுமார் 1.65 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 524.32 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.24 லட்சம் பேல் கச்சா சணல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
------------
AD/IR/RS/KRS
(Release ID: 2012358)
(Release ID: 2012412)
Visitor Counter : 143
Read this release in:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati